Tuesday, April 22, 2008




தமிழ் சக்கரவர்த்தி




மழலைக் கவிதைகளுக்கு மத்தியில்
கவிதையே மழலையாய் அவதரித்தது
வடுகப்பட்டியில்...

எங்கள் கருப்பு சூரியன்
கால் பதிக்க சிவப்பு
கம்பளம் விரித்தன
வைகறை மேகங்கள்!

கவிதைக்கரம் பிடிக்க காத்திருக்கும்
இவன் எண்ணங்களை காதலிக்கும்
எழத்துக்கள்!

சாயம் போன வார்த்தைகளை
உன் எழதுகோள் உடுத்துவதில்லை
சுவை குறைந்த சொற்களோடு
சமரசம் செய்து கொள்ளுவதில்லை...

மௌனத்தையும்
மொழிப்பெயர்க்கும் உன்
மொழிகள் - அதை
மொழிப்பெயர்க்கும் பிற
மொழிகள் !

இல்லாதார்க்கு இல்லாததை
ஈவதே ஈகை!
அங்கனமே
உடல் கொடுத்தாய்
உணர்வுக்கு...
உணர்வு கொடுத்தாய்
உடலுக்கு...

இசை சிறகு விரிக்கும்
பாடல் பறவைகள்
இதயக்கூட்டில் வசிக்கின்றன!

தூரிகை விரலால்
கவிதை வரைகையில்
வானவிலாகிடும் வெள்ளை
காகிதங்கள்!

"ழ" பெற்ற தமிழாய்
நீ பெற்ற தமிழகம்!

தேசிய விருது அலங்கரித்த
உலக கவியே,
தொடக்கமில்லா வானமாய்
முடிவில்லாத உன்
புகழ்!

"ஈன்ற பொழ்தும்
பெரிதுவக்கும் ..."
என ஒலிக்கிறது குறள்..
திரும்பி பார்க்கையில்
தன் மகனுக்காக ஒலிக்கும்
தமிழ்த்தாயின் குரல்!