Saturday, December 06, 2008

தொடக்கம் தேடும் முடிவு

கி.பி 2043:

மொட்டை மாடியை
முழுமையாக்கும் நிலவு!

நட்சத்திர பொடுகை
மேககூந்தலால் மறைக்கும்
வானம்!

மேனியில் வீணை மீட்டும்
மெல்லிய தென்றல்
மெல்ல இமைக்
கதவுகள் மூடின!

நாற்காலியில் இருந்து கொண்டே
நாற்பது ஆண்டுகள் முன்னோக்கி
பயணம் செய்தேன்!

வசந்த மரத்தின் துளிர்களை காண
நான்கு மாத விடுமுறையில்
நீர் ஊற்றினோம்!

கனவு சிறகுகளை தாங்கி
கல்லூரி வானில் பறக்க
தொடங்கினோம்!

கருவை தாண்டிய குழந்தையாய்
கல்லூரியில் முதல் நாள்!

கல்லூரிதேசத்தில் எங்கள்
வகுப்பு மாநிலங்கள்
பிரிக்கப்பட்டன
துறைகளின் பேதமின்றி!

தெரியாத இடத்திற்கு
தெரிந்தே நாடு
கடத்தப்பட்டோம்!

அரைமணி நேரம் நடந்த வகுப்பில்
அறிமுக படலம்
அரங்கேறியது!

Ragging அலைகளில் நனையாதிருக்க
நடந்து சென்றோம் நிறைந்த
எச்சரிக்கையோடு!

ராணுவ துப்பாக்கி கொண்டு
ரகசியமாக கட்டிடம் தகர்க்க
திட்டம் தீட்டினோம்! (Engineering Drawing)

மரத்திற்கும் இரும்பிற்கும்
உருவம் கொடுத்த
ஓவியர் ஆனோம்! (Workshop)

சக்கையாய் பிழிய
cycle test,
நடத்தாத பாடம்
Assignment' ஆக மாறும்
நாடகம்,
மெத்த படித்து
மொக்கை போடும்
மேதாவிகள் - இப்படி
கூட்டணி கட்சியால்
கொடுக்கப்பட்ட பதவியாய்
பயத்துடன் நகர்ந்தது
முதல் வருடம்!

இரண்டாம் முறை புதுப்பித்தோம்
இம்முறை எங்கள் துறையை
சேர்ந்தவர்களோடு!
தொடர போகும் இவர்களோடு
தொடுத்த முதல் மலர்களையும்
தொலையாமல் பார்த்துகொண்டோம்!

சுதந்திரமாக சுற்றி திரிந்த
எங்களுக்கு semster சிறையும்
சுவர்க்கமாக தோன்றியது!

ஆறு theory
இரண்டு practical
அளவு சாப்பாடு எம்
அறிவுக்கு!

கல்லூரி IT கடலின்
முதல் அலைகள் என்ற
கர்வம் சற்றே எங்களுக்கு
உண்டு!

புத்தக அறிவோடு
பொழதுபோக்கு அறிவையும் பெற
தொடங்கினோம்!

class bunk செய்து
cinema ஞானம் வளர்த்தோம்!

வாய்ப்புகளை வீணாக்காமல்
வெட்டி பேச்சு பேசினோம்!

கடலுக்கு சென்று
கல்லூரி நட்பை
கட்டி முடித்தோம்! (First time the whole class went to besant nagar beach)

கிரகப்பிவேசம் செய்தோம்
நண்பர்கள் நாங்கள்
கூட்டுக்குடும்பமாய்!

மூன்றாம் வருட முன்னுரையே
தெளிவுப்படுத்தியது வகுப்புக்கள்
இனி நட்பு பாடங்களுக்காக என்று!

இதழ் வலிக்காமல் பாடம் எடுத்து
இம்சைப்படுத்தினர் எங்கள் செவிகளை!

வயிற்றெரிச்சல் இடையில்
வரவழைத்தோம் எங்கள்
"Newsletter" ஐ
எரியும் கொள்ளியில்
எண்ணெய் ஊற்றி!

நட்பு மழையில்
நனைத்த எங்களை
உலர வைத்த
ஓரிரு ஊடல்கள்!

நாட்களும் நகர்ந்தன
நான்கமாண்டும் மலர்ந்தது!

சுற்றுலா சென்று வந்தோம்
சுகமான நினைவுகளை
ஈன்று எடுத்தோம்!

ஏழு நாட்கள்
ஏழு நொடியாய்
உருமாறியது!

Samurai cyclone' ஆல்
சற்றே பாதிக்கப்பட்டது
எங்கள் நட்பு மண்டலம்! (Whole tour we were listening to "Samurai" movie songs)

முடிந்த மழையின்
முடியாத தூறலாய்
Cadenza! (Symposium name)

Culturals, college day
என்று நட்பை
மெருகேற்றிய பொற்கொல்லர்கள்!

பிரியக்கூடாது என்று
பிறரிடம் கையெழத்து
பெற்றோம்
பிரிய போவதை
உணர்ந்து!

கல்லூரி வீணையில்
இசைத்த இந்த
நட்பு தந்திகள்
நீங்கின
மீட்டிய நட்பை
மனதில் இசைத்துக்
கொண்டே!

விழிகளின் நீரால்
நினைவுகளை நனைத்தேன்
மேகநீரால்
நினைவு பெற்றேன்!

மெல்ல நடந்தேன்
மீண்டு போனதை
மீண்டும் பெற்ற
உணர்வுடன்!