Friday, December 07, 2007

ஊடல்…

கவிதையோடு ஒரு பேச்சுவார்த்தை…

வார்த்தை தராமல் அடம் பிடிக்கும்
என் செல்லமே...

உயிர் மட்டும் போதுமா
உருவம் வேண்டாமா ?

உன்னை புனைவதால்
குறையாது நின்னழகு
மாறாக கூடும்!

நான் தவித்த வேளையில்
நீர் வார்த்த நாட்கள்
ஞாபகம் இல்லையோ?

மறந்து போனேன்
என்ற கோபமா?
முகம் காட்ட மறுக்கிறாய்!

தவறே செய்தாலும் தள்ளிவிடாதே தோழி
தோளில் சாயத்து தண்டனை கொடு!

இழந்து போனேன் என்னை
இறுக்கி பிடிக்கும் பணிகளால்

தொலைந்திருந்த நான் தேட தொடங்குகிறேன்
உன்னில் என்னை மீண்டும் தொலைப்பதற்கு!

பள்ளிப் பருவத்தில் என்னுள்
பதியம் போட்டாய் உன்
விதையை!

கல்லூரி காலத்தில் நாடு கடத்தினாய்
ஆனால்
மென்பொருளின் வன்மையிடம்
தோற்று போனாய்!

பிரிவின் வலியை கூட
உணராமல் உணர்வுகளை
உணவாக்கி கொண்டது
உணவு கொடுக்கும்
வேலை!

பாசி படர்ந்த குளமாய்
பழுதாகி போனது மனம்!

ஒவ்வொரு தனிமையும்
தவறாமல் என்னை கேட்கும்
நாம் சேர போகும்
தருணத்தை பற்றி !

விடைக் கொடு கேள்விக்கு
விடைக் கொடுக்காதே நம் காதலுக்கு !

உனக்கென்று உறவுகள்
பல இருக்கலாம்
உள்ளத்தோடு சிலர்
உறைந்திருக்கலாம் - என்றாலும்

உண்டு எனக்கோர் இடம்
நான் இறந்த பின்பும்!

14 comments:

Venky said...
This comment has been removed by the author.
Venky said...

arumai arumai!!!

Kavidhai arpudham. Ungalukku ippadi oru interest irukku enbadhu enakku idhu varai theriyaadhu.. good!

nice title to your blog VP. catchy aa irukku.

"Unnai punaivadhaal kuraiyaadhu..." - nice verse that!

"ovvoru thanimaiyum..." - Good imagination VP.

great going VP. expecting more!!

(small typo - "izhundhu ponen". Correct pannidunga.)

Keep blogging!

Unknown said...

VP...way to start a blog. adhuvum
kavidhai vaithe kavidhaiya..nalla yosanai.
Keep writing more friend. enjoy reading them!!

Anonymous said...

hey VP

nee kavithai eluthi romba naal achunu kavithai kitte supera solra ....

Too good ...keep going

Kumar said...

Sollavae illa !!!...unnakum ennai maathiri kavithai varumnu...anyway, unkitta innum niraiya ethirpaguren...All the best

Lakshmi Sahambari said...

///

ஒவ்வொரு தனிமையும்
தவறாமல் என்னை கேட்கும்
நாம் சேர போகும்
தருணத்தை பற்றி !

///

awesome!!

Kalpana said...

Good work! Keep it up!
I love reading little verses very much!

Kalpana said...

Good work! Keep it up!
I love reading little verses very much!

Anonymous said...

good post machi..
-Senthil

Unknown said...

Thambi,

Unn Jannallaku Veliyae ennavendru enaku mattum thaan theriyum..........

Thamizhukaga varutha paduvadha....
Unnai ninaithu perumai paduvatha....

Varutham: Thamizhai valarkavendiya nee....Infy'ai Valarkiraai... :(

Perumai: Nee enn uyir Nanban...:)

Maraka Mudiyadhadu: Neeyum Naanum Serndhu Sight aditha Naatkal... ;-)

Ramesh said...

அப்பப்பா!
இத்தனை அழகாய் அலை அலையாய்
வாதம் செய்து வாகை சூடும் அளவிற்கு
தேவ மல்லிகையோ அன்றி பாரிஜாதமோ?

அந்த உள்ளம் கவர் கள்ளி
ஓயிலான ஓவியம்
கவி வடிவான சுந்தரி

சந்திக்கும் சிந்தனையில்
சந்திப்பிழை கூட அழகு தான்!

(விடைக் கொடு அல்ல விடை கொடு)

Ramesh said...
This comment has been removed by the author.
Ramesh said...
This comment has been removed by the author.
Ramesh said...

வார்த்தை தராமல் அடம் பிடிக்கும்
என் செல்லமே...
(உன்னுயிர் பெண்ணவள் தமிழோ?
அன்றி தனித்தேன் மொழியோ?)

உயிர் மட்டும் போதுமா
உருவம் வேண்டாமா ?
(அப்பப்பா
மாயவன் படைத்திடும் மாயப்பிண்டம்,
உடைந்த பின் ஒட்டா உயிர் பாண்டம்,
பிரம்மானாய் மிளிர்கிறாய்!)

உன்னை புனைவதால்
குறையாது நின்னழகு
மாறாக கூடும்!
(மிக சரி தான்...
தேன் தந்த பின்னும்
மகரந்தம் சூடும் மலர்கள்
அழகு குன்றுமோ?)

நான் தவித்த வேளையில்
நீர் வார்த்த நாட்கள்
ஞாபகம் இல்லையோ?
(வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன்
என்று வள்ளல் பெருந்தகை சொல் அடி பிறளாமல் நடக்கும் மறத் தமிழச்சியோ?)

மறந்து போனேன்
என்ற கோபமா?
முகம் காட்ட மறுக்கிறாய்!
(சொல்லாமல் சொல்கிறாயோ?
உன் முகமும் என் முகமும் வேறென்று உணரும்
தன்மை இழந்தேன்..
செம்புலப்பெயல் நீர்ப் போல் கலந்தேன் என்று?)

தவறே செய்தாலும் தள்ளிவிடாதே தோழி
தோளில் சாயத்து தண்டனை கொடு!
(தோளோடு நிற்கும் தோழி....
தண்டிக்கும் அரசி...
திருத்தும் கடவுள்...
பரிவைக் காட்டும் தாய்
எத்தனை வடிவம்?
உனை களவாடிய,
சித்திரைக் கள்ளிக்கு!)

இழுந்து போனேன் என்னை
இறுக்கி பிடிக்கும் பணிகளால்
(துயர் துடைக்கும் தோகையாள்
அந்தி மலர் போல் இன்பம் அளிக்கும்
அல்லி மலர் பார்வையாள்?)

தொலைந்திருந்த நான் தேட தொடங்குகிறேன்
உன்னில் என்னை மீண்டும் தொலைப்பதற்கு!
(விருக்ஷங்கள் தான் மூல விதை தேட முடிவோ?
அன்றி, தன் குலம் வாழ விதையாய் குறுக எண்ணமோ?)

பள்ளிப் பருவத்தில் என்னுள்
பதியம் போட்டாய் உன்
விதையை!
(பசு மரத்தாணி என பதிந்தவளோ?
அன்றி மருதோன்றி என
பால பருவத்தில் பிடி சுட்டுவிரல்களில் ஒளிர்ந்தவளோ?)

கல்லூரி காலத்தில் நாடு கடத்தினாய்
ஆனால்
மென்பொருளின் வன்மையிடம்
தோற்று போனாய்!
("திறை கடல் ஓடியும் திரவியம் தேடு"
என உரைத்தவன் கையை, இல்லை நாவை,
ஏரி தழல் கொண்டு சுட்டு எரிக்க,
மனம் துடிக்க வைத்தாளோ?)

பிரிவின் வலியை கூட
உணராமல் உணர்வுகளை
உணவாக்கி கொண்டது
உணவு கொடுக்கும்
வேலை!
(காளையின் வலி அறியுமா நுகத்தடி?
அன்றி அறிவானோ ஏர் சுமக்கும் உழவன்?)

பாசி படர்ந்த குளமாய்
பழுதாகி போனது மனம்!
(அட.. இது கூட கவிநயம் தான்...
நீலம் பலர் பார்க்கும் வண்ணம்...
பசுமை தான் பசி போக்கும் நிறமன்றோ?
உன் பாசம் எனக்குள் இத்தனை வேகமாய் படர்ந்தது அதிசயம்தான்!)

ஒவ்வொரு தனிமையும்
தவறாமல் என்னை கேட்கும்
நாம் சேர போகும்
தருணத்தை பற்றி !
(பேச தெரிந்த தனிமை!
இக்கணம், அதுவன்றி வேறு என்ன துணை?)

விடைக் கொடு கேள்விக்கு
விடைக் கொடுக்காதே நம் காதலுக்கு !
(உன் மௌனம் தான் விடை!
பேசா வார்த்தைக்கு எத்தனை அர்த்தம்?
இமை பிரியுமா விழி?)

உனக்கென்று உறவுகள்
பல இருக்கலாம்
உள்ளத்தோடு சிலர்
உறைந்திருக்கலாம் - என்றாலும்
(பலர் சூழ வாழும் மூங்கில் நீ...
பலாவினுள் மறைந்திருக்கும்
பல விதைகள், உன் எண்ணம்!)

உண்டு எனக்கோர் இடம்
நான் இறந்த பின்பும்!
(விதை மண்ணுள் மறைந்தபின் எங்கு போகும்?
உயிர் மூச்சு முட்ட மண்ணை பிளந்து வாராதோ?
இல்லை, பொன் சேர் தாமிரமாய், உள்கலந்து வாழதோ?
வாழை போல் பிறர்க்கு உதவ தழைப்பேன் உன்னுள்ளும்,
கருணையெனும் பெயர் கொண்டு!)