Monday, November 03, 2008


இருவர்

ஒரு மழை நாளில் தொடங்கியது
நம் நட்பு!

இருவருடைய இச்சைகளின்
எச்சங்களாய் நீங்கள்!

கவனக்குறைவு
கருவறை கதவு
திறந்து விட்டது!

ஒண்டுக் குடித்தனத்திலிருந்து
மிக பெரிய பிரபஞ்சத்திற்கு
கிரகப்பிவேசம் செய்தீர்கள்!

மணம் முடிக்காது மழலை கொண்டதால்
மாயத்து கொண்டாளோ மறத்தமிழச்சியாம்
உங்கள் அன்னை?

முதல் காட்சியாய்
உயிரற்ற உங்கள்
தாயின் முகம்!

"அரசு தொட்டில் ஆறறிவுக்கு மட்டும்" - என்றே
எங்களின் ஓரறிவுக்கு எட்டியது

தேசாந்திரம் சென்றிருந்த வான் மழை
திடீரென்று வீடு திரும்பியது!

குளித்து முடித்தும் குடிக்க கூழ் இல்லை
கசக்கி கட்ட ஓர் கந்தலும் இல்லை!

வண்டிக்கு உடை கொடுத்த மக்கள் - உங்கள்
வயிற்றுக்கு உணவு மறுத்தனர்!

குளிர் தாங்கா பிஞ்சென்றும் பாராமல்
விரட்டபட்டாய் ஒவ்வொரு வீட்டிலிருந்தும்!

கால் அழக்கு ஏற்கும் துணியிலும் உங்கள்
உடல் அழக்கு படாது பார்த்த
உத்தமர்கள் நாங்கள்!

ஆயிரம் சதுர அடியில்
அரை அடி தர மறுத்த
அன்பு தெய்வங்கள் நாங்கள்!

உடனிருப்போர் உள்ளம் புரியா
உயிருள்ள பிணங்கள் யாம்
உங்கள் தேவை அறிவோமா?

அலுவல் திரும்பிய ஆதவனால்
அன்னையின் கதகதப்பு அடைந்தீர்!

பசியென்று சொல்ல
மொழியும் திராணியுமின்றி
தவித்தீர்!

கடைசியாய்,
என் வீட்டு மாடிப்படி
உங்கள் படுக்கை அறையாய்
மாறி போனதில் மகிழ்ந்து
இருந்தேன்
மறுநாள் சாலையோரத்தில்
சமாதியாய் உங்களை
காணும் வரை!

சொர்க்கம் சேரும் வரை
உண்பதற்காக எடுத்து செல்லுங்கள்
உம்மிருவர்க்காக
நான் வாங்கிய இந்த
பிஸ்கட் துண்டுகளை!

2 comments:

Ramesh said...

நாட்கள் கடந்தபின் முதல் கவிதை...
மாய்த்து கொண்ட ம றத் தமிழச்சி - அற்புதமான உவமானம்

ஆயிரம் சதுரடியும் அரையடியும்
சுருங்கி விட்ட மனித மனத்திற்கு அழகாய் சுழற்றிய சாட்டை!

உடை அழுக்கு நாம் மன அழுக்கை எள்ளி நகையாடுகிறது!!

இருந்தபோது கிடைக்காத அரவணைப்பும்
போகும் போது போடும் வாய்க்கரிசி - மனித பழக்கமோ?

எல்லாம் சரி - நாம் எங்கே தொலைந்து போனோம்?
முல்லைக்கு தேரும் மயிலுக்கு போர்வையும்
புள்ளிரு புன்கண் தீர்த்த நம் பாட்டனின் சொத்துகளும்
காக்கை குருவி எங்கள் ஜாதி என்ற பாரதியின் வாக்கும்
சட்டப்படி இந்த பேரனை ஏன் சாரவில்லை?

போர்வையும் ஜாதியும் உண்டு தேர்கூட உண்டு...
மற்றபடி அதில் உள்ள தத்துவங்கள் மறை பொருளும் "மற" பொருளென் றோமோ?

எங்கோ பிழை? எனதோ பிழை? அன்றி நமதே பிழை!
இரை தேடும் வேகத்தில் இறை மறந்து
மக்களில் மாக்கள் என்றானோம்!
வெட்கம்! வெட்கம்!!

இனியேனும் பகிர்ந்த்தும்போம்! வையம் யாவர்க்கும் என அறிவோம்!
நன்றி என் நண்பனே! என்றோ அணைந்த விளக்கை
இருளிலும் தேடி அதற்கு உயிரேனும் ஒளி கொடுத்தாய்!
சூழ்நிலைக் கைதிகள் வாழ்த்தாவிடி னும்
வாழ்த்தும் பேருள்ளம் படைத்த
வாலுள்ள நாங்கள் இருக்கிறோம்!!

Anonymous said...

Elloraalum kavithai ezhutha mudinthaalum
pinbu evan kavigyan aagiraan?

evan oruvan thannudaiya sinthanai azhukkai aarainthu
samooga aathikka azhukkai padhivu seithu
makkalukkaga ezhuthubavan mattumey
kavigyan aagiraan enbathu en karuthu.

kaal azhukku yerkum thuniyilum ungal
udal azhukku padaathu paartha
uthamargal naangal

udaniruppor ullam puriya
uyirulla pinangal yaam
ungal thevai arivoma?

intha vaakiyangalil unnudaiya pagutharivai paarkiren

mikka nanru.

nee kavigyan aavatharkku
unnudaiya mutha adiyai eduthu vaithatharkku
unnai nanban enru koora perumai padugiren.

vaazhthukkal!
vp sinthanai perugattum.
vaiyagam orunaal vaazhthattum.