Thursday, February 05, 2009

தொலைந்த நட்பு

உன் அறிமுகம் கிடைக்காது போயிருந்தால்
பிடித்தமான ஏதோ ஒன்றை
கண்டிப்பாய் இழந்திருப்பேன்!

உனக்காக கவிதை எழுத
என் கைகள்
காகிதம் தொடும் முன்
எண்ணங்கள் முன்னமே
அமர்ந்து கொள்கிறது!

பல பெண்களுக்கு மத்தியில் தன் தாய்
அறியும் பிள்ளையாய் என் தோழியாய்
உன்னை அறிந்தேன்...

கண்டதும் காதல் நேருமோ
தெரியாது ஆனால்
நட்பு சாத்தியம் - அதற்கு
நாமே உதாரணம்!

நட்பு கோப்பை வழிய
தேநீர் பேச்சுக்கள்

நான் நீ பேதம் கலைத்த
நீண்ட உரையாடல்கள்

இசையும் தமிழும்
இணைத்த பொழுதுகள்

மனம் பேச
உதடுகள் உறங்கிய
இரவுகள்!

இப்படி நான் சொல்ல
இன்னும் எத்தனை எத்தனை
சந்தர்பங்கள்?

ஒரு இதயம் இரண்டு
உயிர் தாங்குமோ?
உன் உறவு கொடுத்த
கேள்வி இது

என்றும் இருந்திடும் நம் நட்பு
என்ற எண்ணத்தில் விழந்தது
எரிதழல்

பிழை செய்தேனே
உன்னை பிரிந்து போக
காரணமாகி...
என் நெஞ்சம்
ரணமாகி...

விழிகளும் வார்த்தைகளும் மறுக்கப்பட்ட
நம் உறவுக்கு இனி இதயங்களே
சிறைச்சாலை!

எழுதி எழுதி அழிக்கும்
கவிதை போல
வந்து வந்து போகும்
உன் நினைவுகள்...
அதற்கு
இடம் கொடுத்து
தள்ளி படுக்கும்
இமைகள்!

கைகோர்க்கும்
விரல் எங்கே?
என் தமிழ் சுவைக்கும்
உன்னிதழ்கள் எங்கே?
நட்பு பேசும் உன்
கண்கள் எங்கே?
என் கோபம் தணிக்கும்
உன் சொற்கள் எங்கே?

உள்ளம் தவிர்த்து நீ பேசும்
உன் இன்னொரு ஜீவன்
இங்கே ஏங்கி தவிக்கையில்
உடனிருந்து மறைந்து இருக்கும் உயிராய்
நீ இருப்பது எங்கே?

இனி
நீயல்லா பயணங்கள்
தொலைபேசி அழைப்புகள்
காரணமில்லா கோபங்கள்
மணிக்கொரு முறை
உன் முக தரிசனம்
எதுவும் இல்லாத
ஊனமான வாழ்க்கையாய்
மாறக்கூடும்!

தள்ளி இருக்கையில்
சேர்ந்து இருந்த தோழி
அருகில் இருக்கையில்
தொலைவாகி போனாயே
பின்பு
தொலைந்தும் போனாயே!

பிழை காம்பு தாங்கும்
என் கவிதை மலர்
முகர இல்லாது
போனாயே
என்னை ஏமாற்றி
சென்றாயே!

நான் கவி கிறுக்க
காரணமானவளே
இன்று கவிஞனாய்
நானிருக்க காணாது
போனாயே!

மறுபிறப்பு என்பது நிஜமென்றால்
இம்முறை பிரிவு
தோற்று போக,
மாறாத நம்
உள்ளமும் முகமும்
கொண்ட அதே
உறவு வேண்டும்!

இருள் தேடும் விடியலாய்
எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன்
உன்னை வரவேற்க
கையில் ஒரு
பூங்கொத்தோடு!!!

10 comments:

Kalpana said...

Romba nalla irukku...
Ippo un kooda satharanama pesarathunaalum, sutha thamizhle pesanumnu thonuthu :-)

Min anjal, min uraiyaadal, min pathirikkai (blog-kku enna solla), irukkum intha kaala kattathil, natpu tholainthu pogaathu...

Anonymous said...

Yaaruppa antha ponnu!
unna, intha alavukku feel panna vittuttu avanga engae poittanga???

Gud one!!!

Venky said...

"மனம் பேச உதடுகள் உறங்கிய இரவுகள்!" - அருமையான வரி வீ. பீ.!! இந்தக்கவிதை படிக்கும் போது பல நினைவுகள் திரண்டு ஓடி வருகிறது... சில நேரங்களில் விடியல் என்று ஒன்று இருப்பதே மறந்துபோய் விடுகிறது இருளுக்கு... :) உங்கள் கவிதையுடன் என்னால் ரொம்ப "relate" பண்ண முடிந்தது...

கவிக்கு நன்றி!

Ramesh said...

அற்புதங்கள் நொடியில் நிகழ்பவையாம்! - எத்தனை பெரிய பொய்!
இங்கே நீ கண்ணுக்கு கருத்துக்கு வைத்த விருந்து அப்படியில்லை!

இதில் பல சொல்லாடால் உன் "நிலைக் குறிப்பாக" பார்த்த ஞாபகம்!

இதை எங்கோ படித்திருக்கிறேன் -
அன்னை இழந்தால் அன்பை இழப்பாய்!
தந்தை இழந்தால் நெறியை இழப்பாய்!
குருவை இழந்தல் அறிவை இழப்பாய்!
இல்லாளை இழந்தால் எல்லாமும் இழப்பாய்!

மற்ற மூவரை காட்டிலும் இல்லாள் சிறப்புற காரணம்
அவள் நல்ல தோழியாய் அமைவது தான்!

ஊடல் நட்பிற்கும் ஊக்கம் தான்!
நட்பு தொலைவது கொஞ்சம் பெரிய தாக்கம்!
இந்த குறிப்பு இருவருக்கும் தான்!

Karthick D P said...

சாதரணமாய் இயங்கிய என் இதயத்தை ஒரு நிமிடம் நிறுத்திய நினைவுகள், அதன் துடிப்பாய் இருந்த தோழியை நினைவுபடுத்திய வரிகள்..
எளிமையான வார்த்தைகளில் ஆழாமான உண்மைகளை உணர்த்திய வி.பி'கு வாழ்த்துக்கள் !!

Valli said...

Hi VP...

Usually i don`t have the habit of reading "kavidhai`s"...Hope u know that...Even when u sent ur writings to my infy mail n asked me to read, i did not read them..i just consoled u by telling dat it looks good but naan padichaenna vidinjidum...n paadhi puriyaadhu..so better u read it in front of me n explain nu sonnaen....

But today wen i saw this blogspot, cudnt close the window widout reading them. Early morning, with hot tea in one hand and laptop in the other, just started to read ur kavidhai`s....It gave links to many sweet memories...[ So as i read each line, i used to go to a memory link n get back in a wile to read the next line n go for another :) ] Though i was struggling a bit to read tamil, i didn`t give it up cos of the thoughts those little scribblings invoked in me....Awesome, fantabulous n very refreshing...

Superb VP....Keep going....

ஞானவதி அசோகன் said...

Un thoazhi sirandhaval, Irundha pozhudhu unaku kavithaiyai inithiukiraal, Tholaindha pin kvithaiyil inikiraal! Anaivarukum autograph ninaivirku varum ithai padithavudan.

Abhi said...

Fabulous VP! Few things in life can be better realized and understood only after losing them. Azhagiya vazhkai padhivu....

Anonymous said...

Haikus please...

VP said...

May i know the friend who posted the comment "Haikus please"?