Sunday, October 18, 2009

இங்கே காணப்படும் எண்ணங்கள் யாவும் சொல்லப்பட்ட கருத்துக்களுக்கு பதிலே தவிர சொன்னவர்களுக்கு எதிராக அல்ல...

ஆத்திகம், நாத்திகம், பகுத்தறிவு...
(பகுதி 1)

ஆத்திகம் என்றால்?
கடவுள் உண்டு என்பது ஆத்திகம். இது கிடையாது நான் சொல்லுவது. கடவுள் பெயரால் சக உயிரை நோகடிப்பது, எல்லோர் இடத்திலும் நீக்கமற நிறைந்து இருப்பது இறைவன் என்பது அறியாது இருப்பது, சாதி மத துவேஷங்கள் பாராட்டுவது - மேற்சொன்னவற்றை பின்பற்றாது, நாமும், நம்மை சுற்றி இருப்பதும், இருப்பவர்களும் இறைவனே என்று உணர்வது ஆத்திகம்...

ஆரம்பமே குழப்பமா இருக்குதே??
இந்த உலகத்தை படைத்தது இறைவன் என்றால், அவன் படைத்த ஒரு மனிதனை அல்லது உயிரை உடலால், பேச்சால், எழுத்தால், வஞ்சத்தால் காயப்படுத்துவது அவனை நீங்கள் காயப்படுத்துவது போல் தானே... ஐயா, நம்ம எல்லோரையும் உண்டாக்கியது அவன் என்றால், அப்ப நாம எல்லோரும் ஒண்ணு தானே. ஒரு அம்மாவுக்கு பிறக்கற குழந்தைகள் எப்படி வேற வேற ஜாதி ஆக முடியும்?

அப்ப ஜாதின்னு கிடையாதா?
நான் படித்த அல்லது அறிந்த வரையில், செய்கிற தொழில் கொண்டு வகுக்கப்பட்டதே இந்த ஜாதி... ஆனா இப்ப யாரும் எதுவும் செய்யும் யுகத்தில் எப்படி இது இன்னும் செல்லும்? கடவுள் மழை மாதிரி... பொதுவானவர். தயை கூர்ந்து உங்கள் அரைவேக்காடு பக்தியால் அவர் பெயரை பயன்படுத்தி பிறரை இம்சிக்காதீர்கள்.

இந்த காலத்திலும் சில ஆலயங்களில் அரிஜன மக்கள் எனப்படும் இனத்திற்கு அனுமதி மறுக்கப்படுவது குறித்து?

ஆழ்வார்களில் ஒருவர் சொல்லுகிறார்
இழிகுலத்தவர்களேனும் எம் அடியார்கள் ஆகில்
தொழுமினீர் கொடுமின் கொண்மின்

இப்படி செய்பவர்கள் கண்டிப்பாக கடவுளை நம்புகிறார்கள் என்று தோன்றவில்லை. இது கோயிலுக்கு மட்டும் இல்லை(இந்து மதம் மட்டும் அல்ல, எந்த மதம் இதை செய்தாலும்) ஏன் கடவுளை இருக்கு என்பவர்களுக்கு மட்டும் இல்லை. சீழ் படிந்த ஜாதி வெறி பிடித்து அழுக்காய் போயிருக்கும் மனம் படைத்த அனைவருக்கும் தான் - எப்பொழுது உணர போகறீர்கள் - நீங்கள் மனிதனாய் பரிணாம வளர்ச்சியற்று இருப்பதை?

ஒரே மதம் கொண்டவர்கள் கூட உள்ளுக்குள் அடித்து கொள்ளுவதை? (இந்து, இஸ்லாம், கிருஸ்துவம் - எங்கும் உள்ளது)
நண்பர்களே, தெரிந்த ஒரு விஷயம் தான், இருந்தாலும் சொல்லுகிறேன் - அனைத்து மதங்களும் கடவுள்களும் சொன்ன அடிப்படை செய்தி - அனைவரையும் நேசியுங்கள்,உதவி செய்யுங்கள். முடியாது போனால் - சுலபமான ஒன்று. யாரையும் துன்பத்திற்கு ஆளாகாதீர்கள். இதை விட்டு நமக்குள் யார் பெரியவர், சிறந்தவர் என்று அடித்து கொள்ளுவதில் பைசாவிற்கு கூட பயனில்லை.

கடவுள் மனிதனை பிரித்து வைத்து இருக்கிறதா?
யாரும் ஜாதி பாராட்ட கூடாது என்றும், இழிவாய் நினைத்தல் ஆகாது என்றும் ஒவ்வொரு மதத்தை சேர்ந்த தெய்வங்கள் கூறுகின்றன.உதாரணத்திற்கு, இந்து மத தெய்வம் நாராயணன் தன் அவதாரங்களில் - பிராமணனாய், க்ஷத்ரியனாய், யாதவனாய் பிறந்து உள்ளான். அவனை எல்லோரும் தொழுகின்றனர். இதே போல், ஏசுவும் ஆடு மேய்க்கும் மந்தையில் பிறந்தவரே, முகம்மது நபியும் ஆடு மேய்த்தவர் தான். இவர்களை பின்பற்றும் நாம் பிறரை குறைவாய் பார்க்க வைப்பது எது? கடவுளா ? ஒரு பறவைக்கு ஈம சடங்குகள் செய்தவன் தெய்வம் - மனிதனை மதியாது இருப்பவன் ஈனத்தின் வடிவம்.

பிறகு வேற என்ன இருக்க முடியும்?
அதை அவர்கள் தான் சொல்ல வேண்டும். இந்த உலகம் சார்ந்திருத்தல் தத்துவம் கொண்டது. தனக்கு தேவையான பொருட்கள் கூட பிறர் செய்து கொடுக்க, பிழையாய் பிரிவினை செய்வது எதற்காக? அதில் ஜாதி பார்க்காது குருடராய் மாறுவது ஏனோ?

4 comments:

ராஜி said...

இந்த தலைப்பில் இன்னும் நிறைய எழுத வாழ்த்துக்கள்...

Very very interesting...

Anonymous said...

//இந்து மத தெய்வம் நாராயணன் தன் அவதாரங்களில் - பிராமணனாய், க்ஷத்ரியனாய், யாதவனாய் பிறந்து உள்ளான். //

21 ஆம் நூற்றாண்டிலாவது நாராயணன் "சூத்திரனாக" அவதாரம் எடுப்பாரா?

-ஆனந்தி

Anonymous said...

//இந்து மத தெய்வம் நாராயணன் தன் அவதாரங்களில் - பிராமணனாய், க்ஷத்ரியனாய், யாதவனாய் பிறந்து உள்ளான். //

21 ஆம் நூற்றாண்டிலாவது நாராயணன் "சூத்திரனாக" அவதாரம் எடுப்பாரா?

என் கேள்வி உனக்கு எதிராக அல்ல. அந்த நாராயணனுக்கு எதிராக என்று புரிந்துக் கொள், என் தோழனே!

-ஆனந்தி

VP said...

Anandhi,
I know this question s not targeted on me but jus to clarify, whatever he is, HE PREACHED a very simple principle - LOVE ALL... When he was RAMA, he considered a bird (Jatayu) as his intimate and when Jatayu died, he did the last rites...what i'm trying 2 justify is - அன்பே கடவுள்... நம்ம சக மனிதர்களை நேசிக்கமால், கடவுளை வணங்குவதில் அரத்தமில்லை...

இறைவன் ஜாதிக்கு அப்பாற்பட்டவன்... கண்ணப்ப நாயனார் கதை தெரியும் அல்லவா...

ராமானுஜர் தன் குருவாய் ஏற்றுக்கொண்டது, அரிஜனம் என்று தற்கால கற்கால அறிவிலிகள் சொல்லும் ஒதுக்கப்பட்டவர்கள் இனத்தை சேர்ந்த ஒருவரை

என் முடிவான கருத்து, இறையோ இறையை முழுமையாய் ஏற்றுக்கொண்டவர்கள் பிரித்தாளும் ஜாதியை பார்ப்பதில்லை அப்படி பார்ப்பவர்கள் இறைவனை நம்பாதவர்கள்...

-VP