Thursday, May 27, 2010

இனியேனும் தொடங்குவோம்



காலம் கொடுத்த இயற்கையே - நீ
காலாவதியாகும் நாள் எந்நாளோ?

முதல் உயிர் கண்ட உன்
மூச்சு நிறுத்தும் எங்கள்
முயற்சி முடியும் நாள்
எந்நாளோ?

ஒன்பது கிரகங்களில்
ஒன்றை மட்டும்
நேசித்தாய்!
இப்பாவிகளை படைத்தும்
இன்னும் எப்படி நீ
ஜீவிக்கிறாய்?

நீ அழுத கண்ணீரை
மழையென்றோம்
அடிக்கடி நீ அழாதிருக்க
மரங்களை மரணத்திற்கு
கொடுத்தோம்!

ஆவியாகும் நீர் மேகமாக மறுக்கிறது
அழும் குழந்தைக்கு தன் கண்ணீரே
குடிநீராகுது!

காட்டை அழித்து நகரமாக்கி
மனிதர்கள் நாங்களே அங்கே
மிருகமானோம்!

மின்சாரம் புணர்ந்தே உன்
மேனியெல்லாம் சூடாகி போனதே!
சூரியனும் வலி தாங்காது
ஓடி ஒளிய இடம் தேடுதே!

நீ சிறு வயதில் கட்டிய
பனிப்பாறைகள்
கார்பன் கடலலையில்
மண் கோபுரமாய்
கலைந்து போனதே!

ஒடிந்து போன முதுகெலும்பில்
கட்டிட மூட்டைகளை கிடத்தினோம்
நீ தாங்காது நெளிந்த போதும்
நிறுத்த மறுத்தோம்!

சுனாமியாய் சீறிப்பார்த்தாய்
சரியாகவில்லை நாங்கள்
இப்பொழதும் வெற்றிலைக்கு
சுண்ணாம்பாய் நீதானே!

இன்னும் எத்தனை நாள்
இயற்கையின் எதிரியாய் நாம்?

இரவை பகலாக்கும்
இம்சைதனை குறைத்திடுவோம்!
சொட்டுநீரை கூட வீணாக்கும் எவரையும்
இ.பி.கோ வில் அடைத்திடுவோம்!

ஆளுக்கொரு மரம்
சொந்தமாய் வைத்திருப்போம்!
அது மரிக்கும் தருணத்தில்
ஆயிரம் மரச்செடி நட்டு
அஞ்சலி செலுத்துவோம்!

அவசியமன்றி
விரையும் வாகனங்களில்
விரையமாகும் எரிபொருளை
தடுத்திடுவோம்!

விதியை மீறுபவர்களுக்கு
நாற்பது நாள்
நடைபயண தண்டனை
விதித்திடுவோம்!

பயன்பட்ட பின்னும்
மறுப்பிறவி எடுக்கும்
பொருட்களை பயன்படுத்த
தவறோம்!

இனியேனும்
தாமதமின்றி தொடங்குவோம்
நம் சந்ததிகள்
தரணியில் வாழ
தரணியை காண!




7 comments:

Kalpana said...

Excellent!
Naanum oru nagara mirugamena ninaikkumpozhuthu, vetkamaaga irukku...

Karthick D P said...

Awesome VP !!!! with your permission I want to publicise ur poem to my friends cirlce atleast to make a very minor change in thoughts...
Nice work.. keep up ur spirit. Expecting more poems like this :)

Anonymous said...

Execllent VP!!! Very excellent start
காலம் கொடுத்த இயற்கையே - நீ
காலாவதியாகும் நாள் எந்நாளோ?

முதல் உயிர் கண்ட உன்
மூச்சு நிறுத்தும் எங்கள்
முயற்சி முடியும் நாள்
எந்நாளோ?

This is really a fantastic idea to prosper our earth.
ஆளுக்கொரு மரம்
சொந்தமாய் வைத்திருப்போம்!
அது மரிக்கும் தருணத்தில்
ஆயிரம் மரச்செடி நட்டு
அஞ்சலி செலுத்துவோம்!

I really love the above lines...

ராஜி said...

ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கு உங்க கவிதை. நல்ல முயற்சி !!!

We will try our best to save our earth :)

Thanks for the wonderful thought !!!

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

Too good VP!

Nanum "I pledge I will" nu oru page-la sign pottu mattum kuduthen... I think I should start following it.

A true eye-opener!

Anonymous said...

நல்ல பதிவு. வீட்டில் இருந்த்படியே பிட்சா ஆர்டர் செய்து சாப்பிடும் வசதியை 21-ஆம் நூற்றாண்டு நமக்கு கொடுத்திருக்கிறது. ஆனால், கேட்பாரற்று கிடக்கும் ஓசோன் ஓட்டையை, நமது சந்ததியருக்கு அடைத்துக் கொடுக்கும் வசதியை நமக்கு கொடுக்கவில்லை.

தேவையற்ற பொருட்களுக்கு, சந்தையை உருவாக்கி உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளை மூடச் சொல்லும், வாயை மூட வைக்க வசதி அதிகம்.

அதிகமாகும் அமில மழை, அமெரிக்க-ஐரோப்பிய காடு, மலைகளை
அழித்து விட்டது. மிச்சம் இருப்பது ஆசிய கண்டமே.

நமது தாய்நாட்டின் செல்வஙகளான காடுகளையும், மலைகளையும் கூட இன்று தொழிற்சாலைகள் தோன்ற இந்தியர்கள் நாம் விற்றுவிட்டோம். தங்கம், வைரம், பாக்சைலட், இரும்பு, அலுமினியம், யுரேனியம், டாலமைட், மார்பில், கிரானைட்,நிலக்கரி, சிலிகா, கார்னெட் இருக்கும் நமது இந்திய காடுகளையும், மலைகளையும் அப்படியே விட்டு விட்டால் தான் என்ன?
மழை பெருகும், மண் வளம் பெறும். விவசாயம் வளரும்.

ஆனால், தொழில் வளர்ச்சி ஏற்கனவே விவசாய வளர்ச்சியை முற்றிலுமாக அழித்துவிட்டது. வருத்தப் படுவதை தவிர வேறு வழியில்லை.


-ஆனந்தி